யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ஜூனியர் சங்க குழுவின் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் தபால் ஊழியர் சங்கம், அதிபர் ஆசிரியர் ஊழியர் சங்கம் மற்றுமம் டெலிகொம் ஜூனியர் சங்கம் போன்ற அனைத்து மட்டத்தில் காணப்படும் ஊழியர் சங்கங்கள் இணைந்து இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டின் தற்போதைய நிலை மற்றும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் இன்று 51 நாளாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு தீர்வு காணும் முகமாக கோட்டாபாய அரசாங்கமும் ராஜபக்சவை பாதுகாப்பதற்காக வந்த ரணில் விக்கிரமசிங்கவையும் உடனடியாக அவர்கள் பதவி விலக வேண்டும்.
வடக்கு கிழக்கு மக்கள் நாட்டில் தற்போது இடம்பெற்று வருகின்ற ராஜபக்ச ஆட்சியாளர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திற்கு ஏன் தமிழ் மக்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தால் தமிழ் மக்கள் சென்ற காலத்தில் இருந்த கூட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
காணாமல் போன உறவுகளின் பிரச்சனை மற்றும் காணிப்பிரச்சினைகள், அரசியல் கைதிகள் சம்பந்தமான பல காரணங்கள் இங்கு தென்படுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு முன் கொண்டு சென்று அவர்களுக்குமான தீர்வினை பெற்றுக் கொடுத்து போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்பது. என்பதைப் பற்றித்தான் இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்துரையாடி உள்ளோம்.
தற்போது உள்ள பொருளாதார தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 420 அதிகரித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் யுத்தகாலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கிய காலமும் உண்டு இவ்வாறான துன்பங்களுக்கு தமிழ்மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப் பிரச்சினைகளையும் நாங்கள் தற்போதுதான் சந்திக்கின்றோம்.
இவ் அரசியல் மாற்றத்திற்கு அப்பால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் ஒரு பாரிய மாற்றம் ஒன்றே தேவை அதைப்பற்றி தான் இன்றைய பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்துரையாடி உள்ளோம்.
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடலில் நடைபெற்ற வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து ஆதரவாளர்களை தற்பொழுது போலிஸார்களால் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு முன்பதாகவே வட கிழக்குப் பகுதிகளிலும் இப்பிரச்சனைகள் அதிகமாகவே நடந்திருக்கின்றது.
தற்பொழுது நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு இப்பிரச்சினைகளுக்கு எவ்வித பதிலும் அழிக்கவில்லை. காலிமுகத்திடல் போராட்டத்தினை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என மக்களுக்கு தெரிவித்துவிட்டு ரணில் விக்கிரமசிங்க பின்பக்கமாக போலீஸார் மூலம் ஆதரவாளர்களை கைது செய்கின்றார். இதனையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தற்போதைய அரசாங்கத்தினால் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது ஆகையால் உங்களுடைய கோரிக்கை ஒன்றாக அமைவது கோட்டாபய அரசாங்கமும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வீட்டுக்கு செல்வதுதான் ஒரே சிறந்த வழியாகும். இந்த காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப் போற ஆரம்பித்த போராட்டமானது கோட்டா அரசினை வீடு செல்லுமாறு கோட்டா காண்பிக்கப்பட்டது ஆனாலும் அரசாங்கம் தற்பொழுது பல சதித்திட்டங்களை வைத்துக்கொண்டு தங்களுடைய ஆட்சியில் நீடிக்கின்றார்கள்.
அதிபர் ஆசிரியர் சங்கம் தற்பொழுது . இரண்டு வருடங்கள் முழுமையான கல்வி இல்லாத எங்களுடைய மாணவர்கள் கபொத சாதாரண பரீட்சையில் தோற்றி கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் அவர்களின் நலன் சார்ந்தே எங்களுடைய போராட்டங்களை தற்பொழுது கைவிட்டு உள்ளோம் . பரீட்சை முடிவடைந்தவுடன் கோத்தாபய ரணில் விக்ரமசிங்க அரசு பதவி விலகாது பட்சத்தில்
எல்லோரினதும் கோரிக்கைகளை அமைவான போராட்டங்களையும் நாங்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு இருக்கின்றோம்.
இன்று வடகிழக்கிலிருந்து இது பாதிக்கும் மேற்பட்ட ஜூனியர் சங்கங்கள் இன்று எங்களுடைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருந்தார்கள் இப்பேச்சுவார்த்தை பாரிய வெற்றியாக தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். என்று இலங்கை அதிபர் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.