களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுளுகமையில் காணாமல் போன 9 வயதுச் சிறுமி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுமி நேற்று (27) வீட்டுக்கு சற்று தூரத்தில் இருந்த கோழி இறைச்சிக் கடைக்கு சென்றவர் விடு திரும்பவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.