சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார சீர்திருத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி செய்யப்படும் வரை இலங்கைக்கு இந்தியாவின் நிதியுதவி பாலம் தேவைப்படும் என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்தித்து இலங்கைகான உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார் .
இதன்போது இந்திய அமைச்சரும் உயர் ஸ்தானிகரும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கடன்கள் மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு போன்ற வடிவங்களில் இந்தியா வழங்கும் உதவிகளை மேலும் வழங்குவதற்கு மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர்.
தொடர்ந்து இந்த உதவிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்தார். இதில் இந்திய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் ஆனந்த நாகேஸ்வரனும் கலந்துரையாடினார்.