இப்படி ஒரு மோசமான சாதனையா? டீம்மை விட்டு துரத்திவிடுங்க.. உச்சக்கட்ட டென்ஷனில் ஆர்சிபி ரசிகர்கள்

மும்பை: ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

ஆர்சிபி அணியில் புதிய கேப்டன், புதிய வீரர்கள் என்று பல மாற்றங்களுடன் நடப்பு சீசனில் அந்த அணி களமிறங்கியது.

எனினும் தொடர் தோல்வி, மற்ற அணியின் தயவு போன்ற காரணங்களால் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு சென்றது.

காப்பாற்றிய பட்டிதார்

காப்பாற்றிய பட்டிதார்

பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் வழக்கம் போல் காலை வாரினர். இருப்பினும் யாரும் எதிர்பாராத வகையில் ரஜத் பட்டிதார் அதிரடியாக சதம் விளாசி, குவாலிபையர் 2 போட்டிக்கு ஆர்சிபி அணியை கொண்டு சென்றார். ஆனால், அந்தப் போட்டியில் வழக்கம் போல் ஆர்சிபி தடுமாறி தொடரை விட்டு வெளியேறியது.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

அனைத்து பிரிவிலும் நல்ல வீரர்கள், புது கேப்டன் அமைந்தும் ஆர்சிபி அணி தோற்றது எப்படி என ரசிகர்கள் யோசித்த நிலையில் தான், இப்படி ஒரு மோசமான சாதனையை அந்த அணி படைத்திருப்பது தெரியவந்தது. அதாவது கடந்து காலங்களில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ், இம்முறை மோசமாக பந்துவீசி இருக்கிறார்.

அதிக சிக்சர்கள்

அதிக சிக்சர்கள்

நடப்பு சீசனில் அவர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை மட்டும் தான் எடுத்து இருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடிக்கவிட்ட பவுலர் என்ற மோசமான சாதனையை முகமது சிராஜ் படைத்திருக்கிறார். இந்த சீசனில் மட்டும் சிராஜ் ஓவரில் 31 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

30 சிக்சர்கள்

30 சிக்சர்கள்

இதை விட அடுத்த அதிர்ச்சியும் காத்துள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக அதிக விக்கெட் மற்றும் பர்பிள் தொப்பியை வென்ற ஹசரங்கா ஓவரில் நடப்பு சீசனில் மட்டும் 30 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடிக்கவிட்ட டாப் 2 பந்துவீச்சாளர்கள் ஒரே அணியில் இருந்தால் அந்த அணி எப்படி விளங்கும். இதனால் கடுப்பான ஆர்சிபி ரசிகர்கள், முகமது சிராஜை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *