விமல் வீரவங்சவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மனைவி தொடர்பான செய்தி

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றிருந்ததற்கு அமைய, இது தொடர்பில் விசாரணை செய்த, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான், புத்திக ஸ்ரீ ராகலவினால் 2 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 
போலி ஆவணங்களை தயாரித்து, தவறான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
மிக நீண்ட நாட்களாக விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் இத் தீர்ப்பு இன்று வழங்கப் பட்டுள்ளமையானது விமல் வீரவங்சவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் ரீதியில் பல செல்வாக்குகக்களை செலுத்தி வந்த நிலையில் நீதிமன்றம் தனது சுயாதீனத்தை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *