அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ளும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்கான வரவு செலவு திட்ட வரைபை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது ரணில் விக்கிரமசிங்க தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோர உள்ளார்.