இந்த சீசனில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக டேவிட் மில்லர் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 68 ரன்கள் எடுத்தார்.இதற்கிடையில், பிரசித் கிருஷ்ணா வீசிய இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல டேவிட் மில்லருக்கு இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.டேவிட் மில்லர் இறுதி ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்து தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.கடந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்தவர் டேவிட் மில்லர் என்பதுடன் ,இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றில் டேவிட் மில்லர் ஏலம் போகவில்லை இரண்டாவது சுற்றிலேயே டேவிட் மில்லர் குஜராத் அணியால் வாங்கப்பட்டார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி IPL இறுதிப்போட்டிக்கான தனது இடத்தைப் பிடித்தது.
