யாழ் மாவட்டத்திற்கு 70% எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப் பெற்றும் தட்டுப்பாடு நிலவுது ஏன்??????

யாழ்.மாவட்டத்தில் , பதுக்கல் வியாபாரிகளிடம் எரிவாயு சிலிண்டர்கள் தாராளமாக உள்ளதாகவும், அதன் விலை 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்ற நிலையில், யாழ்.மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலின்டர்களை பெற முடியவில்லை.

இந்நிலையில் விநியோக இடங்களிலும் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ்.மாவட்டத்தில் பதுக்கல் வியாபாரிகளிடம் தாராளமாக சமையல் எரிவாயு சிலின்டர்கள் உள்ளதாகவும், 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்கப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த விடயம் பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கும் தொியவந்துள்ளது.

மேலும் மாவட்டத்திற்காக கொள்வனவு செய்யப்படும் சமையல் எரிவாயு சிலின்டர்களை பிரதேச செயலகங்களுக்கு ஊடாக விற்க முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *