கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட 429 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்தது.
அதற்கமைய, குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 27,000 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 22,000 லீற்றர் டீசல் மற்றும் 10,000 லீற்றர் மண்ணெண்ணெயை அதிக விலையில் விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.