மத்திய வங்கி அனைத்து வங்கிகளுக்கும் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

சில அத்தியாவசியமான மற்றும் அவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் கடைபிடிக்ககப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பிட்டு இலங்கை மத்திய வங்கியினால் அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் தேசிய சேமிப்பு வங்கிக்கும் அறிவிப்பொன்றை விடுதுள்ளது.

வங்கி கட்டமைப்புக்கள்; செலவாணி விகித ஸ்தீரத்தன்மை மற்றும் செலவாணியை எளிதில் பணமாக்கக்கூடிய நோக்கத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் சிபாரிசுக்கு அமைவாக  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்யும் வரைமுறைகளின் போது கடன் சான்று பத்திரத்தை (Letter of Credit) மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் 100% பண வரம்புடன வழங்கப்பட வேண்டும் என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பண வரம்பு எல்லைக்கு அப்பால் (cash margins) கடன் வசதிகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு பின்வருமாறு:

dod order on maintaining cash margin deposit requirement against LC 20220519 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *