ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களே ஆன சிசுவை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான எரிபொருளை கண்டுபிடிக்க முடியாமல் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்கை இணைத்து மஹேல இதனை தெரிவித்துள்ளார்.