சமுர்த்தி பெறுநர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள், சிறுநீரக நோயாளிகள், முதியோர், ஊனமுற்றோர் உட்பட 3.3 மில்லியன் மக்கள் பயனடையும் வகையில் மே மாதம் முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5000-7500 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
மே மாதத்திற்கான கொடுப்பனவை அடுத்த வாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சின் பணிப்புரையின் பேரில் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி பயனாளிகளுக்கு மூன்று மாத காலத்திற்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.