இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 13 வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற 69வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக ரோவ்மன் பவல் 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷப் பந்த் 39 ரன்களும், பிரித்வி ஷா 24 ரன்களும் எடுத்தனர்.பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரமன்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 35 பந்துகளில் 48 ரன்களும், டெவால்ட் ப்ரீவிஸ் 37 ரன்களும், டிம் டேவிட் 34 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்த தோல்வியின் மூலம், டெல்லி கேப்பிடல்ஸ் ப்ளே-ஆஃப் சுற்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழந்தது. மும்பையின் வெற்றியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பிளே-ஆஃப்-ல் தங்கள் இடத்தை உறுதி செய்தது.