வாட்ஸ் அப் (ஆங்கிலம்: WhatsApp) என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். தமிழில் ” பகிரி” அல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் ” என்றும் அறியப்படுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.[1][2]
உருவாக்குனர் | வாட்ஸ் அப் இன்க். |
---|---|
தொடக்க வெளியீடு | 2009 |
இயக்கு முறைமை | ஐஓஎஸ்ஆண்ட்ராய்டுபிளாக்பெர்ரிநோக்கியா 40 வரிசை அலைபேசிகள்நோக்கியா ஆஷா வகை அலைபேசிகள்சிம்பியன்“விண்டோஸ் அலைபேசிகள்” |
மென்பொருள் வகைமை | நிகழ்நேர/உடனடி செய்தி பகிர்வு |
உரிமம் | உரிமை உடைமையுள்ள மென்பொருள் |
இணையத்தளம் | “www.whatsapp.com“ |
நிறுவப்பட்ட நாள் | 2009 |
---|---|
தலைமையிடம் | மவுண்டெய்ன் வியூ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
நிறுவனர்(கள்) | ஜேன் கோம்பிரையன் ஆக்டன் |
ஊழியர்கள் | 55 |
மேல்நிலை நிறுவனம் | “பேஸ்புக் Inc.,” |
வலைத்தளம் | www.whatsapp.com |
2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின்போது, இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்படுத்தியிருந்தனர்.[3]
வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்