மூதூர் பிரதேச சுயாதீன ஊடகவியலாளர் என்.எம். புஹாரி நேற்று (21) மாலை மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து செய்தி சேகரித்த. வேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளரின் கைத்தொலைபேசியை ஆறு பேர் கொண்ட குழுவினால் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்களுடன் பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் ஊடகவியலாளரிடம் கைத்தொலைபேசி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூதூர் பிரதேசத்தில் துணிச்சலுடன் பக்கச்சார்பின்றி நடுநிலையாக செயற்பட்டு வரும் சுயாதீன ஊடகவியலாளரை தாக்கிய காடையர்களை கைது செய்ய வேண்டும்.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் இச்சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றார்கள். அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பல ஊடகர்கள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூதூரில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது காடையர் கூட்டம் தாக்குதல்
