எரிபொருள் விநியோக போக்குவரத்தின் போது தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுக்கவுள்ளதாக அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில குழுக்கள் பௌசர்களுக்கு மறித்து இடையூறுகளை ஏற்படுத்தியதை கருத்திற்கொண்டு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அதன் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்தார்.