நிக்கி கல்ராணியின் திருமணம் நடந்த அதே நாளில் அவரின் தங்கைக்கு நடந்த விஷயம் – ஓ, அதான் கல்யாணத்துக்கு வரலையா.

நிக்கி கல்ராணியின் திருமணத்திற்கு அவருடைய சகோதரி வராத காரணம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நிக்கி கல்ராணி. இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஒரு மாடலும் ஆவார். பின் இவர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த டார்லிங் என்ற படத்தின் மூலம் தான் நிக்கி கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், டார்லிங் படத்திற்கு முன்பாகவே நிக்கி அவர்கள் கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பிற மொழியில் சில படங்களில் நடித்து இருந்தார். இப்படி இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜவம்சம். இந்த படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகி பாபு, தம்பி ராமையா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட படமாக அமைந்திருந்தது.

நிக்கி -ஆதி திரைப்பயணம்:

மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன் பின் நிக்கி கல்ராணி அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இடியட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி பேய் படம். இருந்தாலும் பெரிய அளவில் இந்த படம் வெற்றி அடைய வில்லை. இதனை தொடர்ந்து நிக்கி அவர்கள் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே நிக்கி அவர்கள் பிரபல நடிகரை திருமணம் செய்து கொள்ள போகும் தகவல் வெளியாகி இருந்தது. அவர் வேற யாரும் இல்லைங்க,

நிக்கி -ஆதி காதல்:

நடிகர் ஆதியை தான் நிக்கி கல்ராணி திருமணம் செய்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், மரகதநாணயம், யாகவராயினும் நாகாக்க போன்ற படங்களில் ஆதி உடன் நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *