சுவிட்சர்லாந்துக்கு அகதியாக சென்று பெரும் செல்வந்தரான நபர்

சுவிட்சர்லாந்துக்கு அகதியாகச் சென்ற ஒருவர், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் பல மில்லியன்கள் சம்பாதித்துள்ளதாக கூறியுள்ள நிலையில், அவர் மீது சுவிஸ் அதிகாரிகள் பண மோசடி விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
Dadvan Yousuf (22) என்னும் நபர், மூன்று வயதுடையவராக இருக்கும்போது, ஈராக்கிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக சென்றார்.
கடந்து ஆண்டு, தான் பிட்காயின் வர்த்தகம் மூலம் பல மில்லியன் சம்பாதித்துள்ளதாகக் கூறியதைத் தொடர்ந்து ஊடகங்களில் தலைப்புச் செய்தியானார்.
அத்துடன், பிட்காயின் வர்த்தகம் குறித்து மகக்ளுக்கு பயிற்றுவிப்பதற்காக கல்வி அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, 2021ம் ஆண்டு, மார்ச் மாதம், The Dohrnii Foundation என்னும் அமைப்பை அவர் உருவாக்கினார். கிரிப்டோ டோக்கன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
எனினும், அந்த நிறுவனம் பங்குகளை விற்பதில் விதிகளை மீறியுள்ளதாகவும், முறையான உரிமம் பெறாமல் முதலீடுகளைப் பெறுவதாகவும் சந்தேகப்பட்ட சுவிஸ் நிதி ஒழுங்குமுறை அமைப்பு அந்த நிறுவனத்தில் சோதனைகள் முன்னெடுத்துள்ளது.
அவர் பண மோசடி செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள Bern மாகாண அதிகாரிகள், அதற்கான விசாரணையைத் துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *