சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் – அனுமதிப்பத்திரமும் ரத்து!*

அறிவுறுத்தல்கள் மற்றும் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நேற்று (19) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

மாகொல தெற்கு, கம்பஹா நால்ல, களனி, பெத்தியாகொட மற்றும் மீரிகம ஆகிய நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *