இரண்டு சமையல் எரிவாயு கப்பல்களுக்கு, இன்று 7 மில்லியன் டொலர் செலுத்தப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம், தெரிவித்துள்ளது.
3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று காலை நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடையும் என்றும், லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாளை முதல் நாளாந்தம் சுமார் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.